இன்றைய சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்குள்ளாகின்றமை நாம் பரவலாக கேள்விப்படும் விடயம். இதிலும் அதிகமாக பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இள வயதுடைய, பின்தங்கிய குடும்ப சூழ்நிலையில் இருந்து வரும் பெண் பிள்ளைகள், பயந்த சுபாவமுடையவர்கள் அதிகம் இவ்வாரான துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனர்.
அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்குள்ளாகுபவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா? பாதிக்கப்பட்ட உங்களுக்கு நீதி கிடைக்க உங்களால் போராட முடியும் என்பதை நீங்கள் இது வரை தெரிந்து வைத்துள்ளீர்களா? இதோ உங்களைப் போன்றவர்களை பாதுகாக்கும் சட்டம்.
இலங்கையில் குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் வேலையிடத்தில் உள்ள ஒருவரினால் வரவேற்கப்படாத பாலியல் முன்செல்கைகள் பாலியல் தொந்தரவுகளாக கருதப்படுகின்றன.
தொந்தரவு செய்பவர் குற்றவாளியாக கருதப்படுபவார். அவர் 5 வருடங்கள் வரைக்குமான சிறை மூலமோ அல்லது தண்ட மூலமோ அல்லது இரண்டின் மூலமோ தண்டிக்கப்படலாம். அவ்வாறானவர் நீதிமன்றம் மூலமாக தீர்மானிக்கப்படும் ஒரு தொகையை தொந்தரவுக் காயங்களினால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும்படி கட்டளையிடப்பட முடியும்.
மூலம்: 1885 இலங்கை குற்றவியல் கோவையின் 345
இன்று சட்டம் ஒன்று உள்ளது என்பதை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கே முறையிடுவது? இப்பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பில் நாம் நாளை உங்களுக்கு அறியத்தருகிறோம்.