பதவி நீக்கப்பட்ட இலங்கை செய்தியாளருக்கு ‘பிபிஸி’50 இலட்சம் ரூபா நட்டஈடு

பிரித்தானிய இளவரசர் ஜோர்ஜின் பிறப்புச் செய்தியை புறம்தள்ளி இலங்கைச் செய்தியொன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்திற்காக ஆகஸ்ட் 2014இல் பதவி நீக்கம் செய்யப்பட்டஇலங்கையைச் சேர்ந்த பிபிசி செய்தியாளருக்கு 50000 பவுண்ட்ஸ் (இலங்கை மதிப்பில்50இலட்சம்) தொகை நட்டஈடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

57 வயதான சந்தன கீர்த்தி பண்டார என்பவருக்கே இந்த நட்டஈட்டுக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஜூலை கலவரம் தொடர்பான செய்தியே தனக்கு அந்தநேரம் முக்கியமாக தென்பட்டதாகவும் எனவே தன்னை அநியாயமாக இனபேதம் காண்பித்து பதவிநீக்கம் செய்துவிட்டதாக வழக்கு தொடுத்திருந்தார்.

பிபிசி நிறுவனத்தில் 18 வருடகாலமாக சேவையாற்றி 2000மாவது ஆண்டு தொடக்கம் சிங்கள சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளராக இவர் சேவையாற்றி இருந்தார். இவரது பதவிநீக்கம் நியாயமானதல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆங்கிலப் பத்திரிகையொன்று இதுபற்றி பிபிசியை பேட்டிகண்டபோது இந்தத் தீர்ப்பால் தாம் ஏமாந்து போயிருப்பதாகக் கூறியுள்ள அதே நேரத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட்டுக் கூறவில்லை என்பதுடன் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்/ உதயன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435