பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஒருநாள் சேவை மீண்டும் அறிவிக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது

இதுதொடர்பாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

பதிவாளர் நாயகம் திணைக்களம்

கொவிட்-19 வைரசு தொற்று நிலவும் காலப்பகுதியில் பொதுவான வழமையான பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துதல்

கொவிட் 19 வைரசு தொற்று நிலவும் காலப்பகுதியில் பொதுவான நாளாந்த நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்ட பணிகளை முன்னெடுப்பதற்கமைவாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அனைத்து காணி மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பணிகள் வரையறுக்கப்பட்ட வகையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதை அறிவிக்கின்றோம்.
இதற்கமைவாக நொத்தாரிஸ் (ஆவணங்கள் எழுதவும் பதியவும் அமர்த்தப்படும் பணியாளர் ) பணிகள் தொடர்பில் கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்வதன் மூலம் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அறிவிக்கின்றோம்.

1. திருமதி ஜே.கே.சீ.எஸ்.ஜாகொட ஆரச்சி – உதவி பதிவாளர் நாயகம் (நொதாரிஸ்), பதிவாளர் நாயகம் திணைக்களம் – தொலைபேசி இலக்கம் 0714485564

2. பதிவாளர் நாயகம் திணைக்களம் கீழுள்ள அனைத்து வலய அலுவலகத்தின் உதவி பணிப்பாளர் நாயகங்கள்

Capture REeeeeeeeeமேலும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட பணியாளர்களுடன் கடமைகள் மேற்கொள்ளப்பட இருப்பதினால் மீண்டும் அறிவிக்கும் வரையில் ஒருநாள் சேவை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதை அறிவித்துக்கொள்கின்றோம்.

இதே போன்று மீண்டும் அறிவிக்கப்படும் வரையில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வலய அலுவலகத்திற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் திருத்தத்துடன் சமர்ப்பிக்கப்படும் பிரகடன பத்திரத்தை பொறுப்பேற்பது தபால் மூல மாத்திரம் இடம்பெறுவதுடன் விசேடமாக கையால் எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டாம் என்றும் அறிpவித்துக்கொள்ளுகின்றோம்.

மேலதிக தகவல்களை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.rgd.gov.lk என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அறிவிக்கின்றோம்.

நன்றி – News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435