பதுளை அதிபர் விவகாரம்- ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலாய அதிபர் விவகாரத்தில் துணைபோன உயரதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு தொழிற்சங்கங்கள் மகஜரொன்றை ஊவா மாகாண ஆளுநர் எம். பி. ஜயசிங்கவிடம் கையளித்தன.

கல்வியமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் பியதாச ரட்னாயக்க, பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர் சரத் ரணசிங்க ஆகியோரையே மேற்படி பதவி விலக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பன்னிரண்டு தொழிற்சங்கங்கள் இணைந்து முன்வைத்துள்ள இம்மகஜரை தேசிய கல்வி சேவை ஊழியர் சங்க பிரதான செயலாளர் ஆர். பிரேமசிறி, ஊவா ஆசிரிய சேவை சங்க உப-செயலாளர் பிரியந்த வருசமான, மாவட்ட செயலாளர் நந்தன ஹப்புகொட, இலங்கை ஆசிரிய சங்க பதுளை மாவட்ட செயலாளர் சரத் ரட்னாயக்க, தேசிய கல்விச் சேவை சங்க பதுளை மாவட்ட தலைவர் டி.எம்.பத்மசிரி ஆகியோர் மாகாண ஆளுநரிடம் கையளித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435