பத்து நிமிடத்தில் கொவிட் 19 பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் புதிய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கட்டார் சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மிகத் துல்லியமாக பரிசோதனை முடிவுகள் இதனூடாக அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு ஹமாட் மெடிகல் கூட்டுத்தாபனத்தின் ஆய்வுகூட மருத்துவ, நோயியல் பிரிவு தலைமை அதிகாரி எனாஸ் அல் குவாரி தெரிவித்துள்ளார்.
நாசியிலிருந்து எடுக்கப்படும் திரவரத்தை எடுத்து பரிசோதனை செய்வதனூடாக அவர்களின் உடல் வெப்பநிலை, இருமல் குறித்த துல்லியமான விபரங்களை பெற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்