பத்து வருடத்தில் அரச ஊழியர் எண்ணிக்கை 30 வீதமாக வளர்ச்சி

2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான ஒரு தசாப்த காலத்தில் அரச ஊழியர்கள் 30 சதவீத அதிகரிப்பைக் கண்டிருப்பதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு தொகை 1.1 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

அரச ஊழியர்களில் 17.8 சதவீதமானவர்கள் அதாவது ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 128 அரச ஊழியர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி அடைந்தி ருக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்பில் மத்திய அரசு, மாகாண அரசு, திணைக்களங்கள் போன்றவை அடங்குகின்றன.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அபிவிருத்தி அதிகாரிகள் என்ற பேரில் 88 ஆயிரம் பேர் நியமனம் பெற்றதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒரு தொகை ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். வருடாந்தம் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதாகவும் ஒரு சிலர் மரணித்துவிடுவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

2006 இல் 4 இலட்சத்து 30 ஆயிரத்து 153 ஆக இருந்த ஓய்வுபெற்ற ஊழியர்கள் தொகை 2015 இல் 5 இலட்சத்து 64 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது என்றும் நிதி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435