பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து சிக்கல்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை (20) கடும் பனிமூட்டம் காணப்படுகின்றமையினால் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக டுபாய் ஷீக் ஷாயெட் வீதி E11p தொடக்கம் அல் வஹ்டா வீதி வரையில் கடுமையான பனீமூட்டத்துடன் வாகன நெரிசலும் காணப்படுவதாக கூகுல் மெப் ஊடாக அறிய முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அல் காஹலில் வீதி E44 வீதியில் பல வீதிகள் இணையும் பகுதியில் வாகன விபத்தொன்று பதிவாகியுள்ளதாகவும் அதனால் இன்று காலை வாகன நெரிசலும் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அல் கவானிஜ் வீதியில் ஏற்பட்ட விபத்தையடுத்து E66 அல் அயின் வீதியில் (டுபாய் சர்வதேச விமான நிலையம் செல்லும் வீதி) ஏற்பட்ட விபத்தையடுத்து போக்குவரத்து தடை காணப்படுவதாகவும் அப்பகுதிக்கு விமான நிலையத்திற்கு செல்வதாயின் நேரத்தோடு செல்வது தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435