கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகளின் பொதிகளைப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்புக் கண்காணிப்புப் பொறிமுறையில் மேலும் நவீன தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் பொதிகளைப் பரிசோதிப்பதற்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தின் அளவு குறைவடையும் என்று இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய பொதிகளைப் பரிசோதிக்கும் கட்டமைப்பு நேற்றுமுதல் விமான நிலையத்தில் பாவனைக்கு வந்திருப்பதாகவும், இந்த நவீன கருவி சுமார் 61 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியைக் கொண்டது என்றும் அதிகாரசபை தெரிவித்திருக்கிறது.