மருந்தாளர், மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், எக்ஸ்ரே கதிர் தொழில்நுட்பவியலாளர் உட்பட 13 துறைகளில் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) காலை அலரி மாளிகையில் ஆரம்பமானது.
குறித்த பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தற்போது தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையை கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சு அதிகாரிகள் தொலைபேசியினூடாகவும் அறிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார மெடிக்கல் பயிற்சி நெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இரு வருட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் இப்பயிற்சி நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு குறித்த காலப்பகுதியில் ஊக்குவிப்பு உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.