பயிற்சி பெற்ற இலங்கையருக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு

பயிற்சி பெற்ற இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

ஏதேனும் உரிய செயல் திறனை பூர்த்தி செய்துள்ள இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்வதற்கு ஜப்பானின் நீதித்துறை அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சுகாதார தொழிலாளர் மற்றும் சேமநல அமைச்சு தேசிய கொள்கையை பிரிதிநிதித்துவப்படுத்தல் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கிடையில் தெளிவான பயிற்சி சேவையாளர்கள் தொடர்பிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ சமர்ப்பித்த பத்திரத்திற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435