பயிலுநர் அபிவிருத்தி அதிகாரிகளுக்கான பயிற்சி செப்டெம்பரில்

கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவிருந்து இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி அதிகாரிகளுக்கான பயிற்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் 2020 காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறித்த பயிற்சியை தேர்தல் பெறுபேறுகள் வௌியானதையடுத்து மீண்டும் ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்ததையடுத்து இப்பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, குறித்த பயிற்சியானது ஓகஸ்ட் மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்படவேண்டும். எனவே இம்மாதம் 11ம் திகதி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கமானது பயிற்சியை ஆரம்பிக்குமாறு எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்ததுடன் அன்றைய தினமே அரச நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே சந்திரசிறியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.

அக்கலந்துரையாடலுக்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பயிற்சி ஆரம்பமாகவுள்ளது என அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435