பல்கலைக்கழகங்களில் 257 விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் 257 விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தகவல் வெளியிட்டுள்ளார்.

வருடாந்தம் ஓய்வுபெறுவோர், வேலையை விட்டுச் செல்வோர் மற்றும் இராஜினாமா செய்வோர் அதிக எண்ணிக்கையாக இருக்கின்றனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இணைத்துக் கொள்ளப்பட்ட விரிவுரையாளர்கள் பட்ட பின்படிப்புக்காக வெளிநாடு சென்றதன் பின்னர் கல்விசார் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. அது மட்டுல்லாது, வெளிநாட்டில் கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் சிலர் மீண்டும் நாடு திரும்புவதும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில துறைகளுக்கு தேவையான விரிவுரையாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பப்படுகின்ற போதிலும் தகுதியான விரிவுரையாளர்கள் கிடைப்பதில்லை என்றும் உயர்கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435