பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர் விபரங்கள்

2016 – 2017 ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் இம்மாத நடுப்பகுதியில் பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இம்முறை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைளுக்காக பொதுவான அனுமதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 696 ஆகும்.

தற்பொழுது நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.
.
இதுதொடாபாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா மேலும் தெரிவிக்கையில் இம்முறை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். வெற்றிடங்கள் இல்லாமையால் மொறட்டுவ பல்லைக்கழகத்தின் பொறியியல்பிட கல்வி நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலுடன் மகாபொல புலமைப் பரிசில்களை பெற்றுக் கொள்ளக்கூடிய தகுதியுடைய மாணவர்களின் பட்டியலும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளனன என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435