
ஏழு அம்ச கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் இன்றுடன் நிறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எழுத்து மூலமாக வழங்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதனால் தமது வேலைநிறுத்தம் நிறைவடையும் சாத்தியம் காப்படுவதாக கூட்டுக்குழுவின் தலைவர் எட்வட் மல்வத்த சுட்டிக்காட்டினார்.
மேலும் இன்று (08) உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியெல்லவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் பேச்சுவார்த்தையின் பின்னர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
2500 ரூபா சம்பள உயர்வை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தல் உட்பட ஏழு அம்ச கோரிக்கையை முன்வைத்து கடந்த மாதம் 27ஆம் திகதி பல்கலைககழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அன்றாட நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்