பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உயர்கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 10ம் திகதி முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவு பிரச்சினைகள் உட்பட பல விடயங்களை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (16) நடைபெறவுள்ளது என்றும் பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள், உயர்கல்வியமைச்சின் அதிகாரிகள் உட்பட விடயம் சார்ந்த பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழக அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.