ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலவீனங்களை குறைக்கும் நோக்கில் ஏற்கனவே சுமார் பணியாற்றிய சுமார் ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது என அதன் தலைவர் அஷோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படை, பயிற்சி மற்றும் நிறுவனம் சாராது வௌியில் இருந்த சேவை வழங்கும் ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜூன் மாதத்தில் நிறுவன பணிகளைத் மீண்டும் ஜூன் மாதம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம், விமான நிலையம் மற்றும் விமான அதிகாரசபையுடன் இணைந்து செயற்படவுள்ளோம்.
“பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். எவ்வாறாயினும், இது குறித்து அரசாங்கம் முடிவு செய்ய வேண்டியிருப்பதால், நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனைய இடங்களின் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்படும்.