தொழில்திறன் கொண்ட இலங்கையர்களுக்கு கட்டாரில் வெவ் வேறு துறைகளில் அதிக தொழில்வாய்ப்புக்களை வழங்குமாறு இலங்கை கோரியுள்ளது.
கட்டாருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எஸ்.பி.லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தினால் இன்று விசேட மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது.
இதில் சுமார் 200க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களும், ஒழுங்கமைப்புகளும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் தற்போது ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கட்டாரில் இலங்கை பணியாளர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இன்று விசேட மாநாடு நடத்தப்படவுள்ளது.