பஹ்ரைனின் சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்

எதிர்வரும் மே மாதம் தொடக்கம் தனியார் துறைக்கு இலத்திரனியல் முறையினூடாக சம்பள வழங்க பஹ்ரைன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தனியார்துறையினரின் சம்பள பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இப்புதிய செயன்முறை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்புதிய நடைமுயைான நேற்று (21) பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலீபா பின் சல்மான் அல் கலீபா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வௌியிடப்பட்டது.

இப்புதிய சம்பள வழங்கும் முறை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் சம்பளப் பணத்தை நேரடியாக வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முடிக்குரிய இளவரசர், அமைச்சரவை செயலாளர் நாயகம் கலாநிதி யஸீர் அல் நசேர் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்களை நடாத்தும் உரிமையாளர் தமது ஊழியர்களின் சம்பளத்தை இனி வங்கியில் வைப்பு செய்யவேண்டும். இச்சம்பள வைப்பு முறையானது நிறுவனத்தின் அளவைப் பொருத்து கிரமமான முறையில் முன்னெடுக்கப்படும். இச்செயற்பாட்டின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை பஹ்ரைன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் முன்னெடுக்கும்.

அனைத்து தனியார் நிறுவனங்களும் குறித்த விடயம் தொடர்பில் அடுத்த வருடம் மே மாதம் தொடக்கம் கண்காணிக்கப்படும். இப்புதிய நடைமுறைக்குள் அந்நாட்டில் பணியாற்றும் வீட்டுப்ணிப்பெண்களும் உள்வாங்கப்படுவார்கள்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435