பாடசாலை பரிசோதகர்களாக 200 பேர்வரை இணைக்க அனுமதி

அரச மற்றும் தனியார் பாடசாலைகளை பரிசோதனை செய்வதற்கு 150 தொடக்கம் 200 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

முப்பது வருடங்களுக்கு முன்னர் இல்லாமலாக்கப்பட்ட பாடசாலை பரிசோதகர் முறைமை மீண்டும் அறிமுகப்படுத்த நடவடிக்கையினூடாகவே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பாடசாலை மேற்பார்வை, பரிசோதனை நடவடிக்கைகள் என்பன மந்தகதிக்கு சென்றுள்ளமையினால் பரிசோதகர்களை நியமித்து அதனூடாக பாடசாலைகளை செயற்றிறன் உடையதாக மாற்ற எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

வலயக் கல்வி அலுவலகம் மற்றும் கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் பாடசாலை பரிசோதனையில் ஈடுபடுவது தற்போது அருகி வருவதாகவும் இதுவே பாடசாலைகளின் தரம் குறைவதற்கான காரணம் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435