கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலைவாய்ப்பை இழந்து தாய்நாடு திரும்ப அல்லது தாய்நாட்டுக்கு அழைத்து வர எதிர்பார்த்துள்ள மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு 2020 ஜூன் மாதம் முதலாம் திகதி சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்களின் கூட்டமைப்பு என்பன ‘அவசர நீதிப் பொறிமுறை’ ஒன்றை அமைப்பதற்கான மனுவை முன்வைத்துள்ளது.
அதனூடாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கும் நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கும் இயலுமாகும் என்பதுடன் கொரோனாவினால் இழந்த ஊதியம் மற்றும ஏனைய கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையை அமைக்குமாறு இம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மிகவும் துன்பகரமாக மாறியுள்ளது. இலட்சக்கணக்கனா புலம்பெயர் தொழிலாளர்களின் சம்பள குறைப்பு, தொழில் இழப்பு, சம்பளம் வழங்கப்படாமை என்பவற்றுடன் கடன் பிரச்சினையினாலும் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என ஆசிய புலம்பெயர்வுசபை (MFA) சுட்டிக்காட்டியுள்ளது.
பாரிய அநீதிக்கு முகங்கொடுத்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பிரதான மூன்று பிரிவுகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கங்களிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதித்துவ நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1.சர்வதேச உரிமைகள் ஆணைக்குழு அமைத்தல்
2. நட்டஈட்டு நிதியம் உருவாக்குதல்
3. தேசிய சட்டத் தொகுதி மீளுருவாக்கம் ஆகியன காரணிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இப்பிரதான 3 பிரிவுகளினூடாக சம்பளம் இழந்த அல்லது சம்பள குறைப்பை எதிர்நோக்கிய மற்றும் வேறு உரிமைகள் இழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் பிரச்சினைகளை தீர்ப்பதனூடான நீதியை நிலைநாட்டுவதற்கான விசேட நிறுவனம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உலக மற்றும் தேசிய மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நட்டஈட்டு நிதியத்தினூடாக பொருத்தமான நட்டஈடு வழங்குதல் பொறிமுறையினை நிலைநாட்டவது போன்ற காரணங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் சம்பளம் வழங்ககாமைக்கு உரிய உரிமைக்கான தேசிய மட்டத்திலான தீர்மானங்களை முன்னெடுக்கப்படவேண்டும். மேலும் விரைவில் தொழிலாளர்களுக்கான நீதிமன்றம் அமைத்தல், நீதிமன்ற கட்டணம் அறிவிடுதல், சம்பள பாதுகாப்பு முறை தயாரித்தல், பல்வேறு மொழிகளில் சேவை அழைப்பு பெற்றுக்கொள்ளல், தூதுவர் குழுவுடன் ஒத்துழைப்புடன் ஆவணங்களை தயாரித்தல், சட்டச் செயற்பாடுகளுக்கான அதிகாரங்களை வழங்குதல், சட்ட உதவி வழங்குதல் மற்றும் தொழிலாளர்கள் முன்வந்து செயற்படுவதற்கு வலுவூட்டல் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகளை பதிவு செய்தல் என்பன குறித்தும் அதிகம் செலுத்துதல் வேண்டும் என ஆசிய புலம்பெயர்வு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வழங்கப்படவேண்டியசம்பளம், மற்றும் ஏனைய உரிமைகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கு மிகவும் பலம்மிக்க பொறிமுறையின் அவசியம் அடையாளங்காணப்பட்டு அவற்றுக்கான வழிமுறைகளை உருவாக்கவேண்டும். அதனூடாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் அவர்கள் வாழும்நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து புலம்பெயர் தொழிலாளரும் தாம் பெற வேண்டிய அனைத்து உரிமைகளையும் கௌரவத்தையும் மென்மேலும் இழக்காதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆசிய புலம்பெயர்வுசபை இறுதியாக வலியுறுத்தியுள்ளது.