பணியிடங்களில் இழைக்கப்படும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கான சட்டவாக்கத்தை சர்வதேச தொழில் தாபனம் (ILO) கடந்த 21ம் திகதி நிறைவேற்றியது.
சர்வதேச தொழில் தாபனத்தின் 108வது மாநாட்டில் இச்சட்டவாக்கம் நிறைவேற்றப்பட்டது.
இம்மாதம் 10ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமான சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் 108வது அமர்வு இடம்பெற்றது. இருவாரங்கள் நடைபெற்ற நூறாண்டுகள் கடந்த இவ்வமர்வில் பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கான சட்டவாக்கம் நிறைவேற்றப்பட்டது.
பாலின சமத்துவத்துடன் கூடிய வாய்ப்புக்களும் கவனிப்பும், வாழ்நாள் கல்வி மற்றும் செயற்றிறன் மிக்க கற்றல் வாய்ப்புக்கள், பேண்தகு சமூக பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் இருந்து பல தொழிற்சங்க பிரதிநிதிகள் இவ்வமர்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.