பா.ம தெரிவுக்குழு நேரடி ஔிபரப்புத்தடை – தகவல் அறியும் உரிமை மீறல்

பாராளுமன்ற தெரிவுக்குழு நேரடி ஒளிபரப்பை இடைநிறுத்தியதானது மக்களின் தகவல் அறியும் அறியும் உரிமையை பறிக்கும் செயலாகும் என்று சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் ஆராய உருவாக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது சந்திப்பின் நேரடி ஔிபரப்பு திடீரென இடையில் நிறுத்தப்பட்டமையானது மக்களின் தகவல் அறியும் உரிமையை பறிக்கும் செயல் என்பதனால் அதனை நாம் கடுமையாக கண்டிக்கிறோம்.

ஏற்கனவே புலனாய்வுத்துறை தகவல் பெறப்பட்டிருந்த நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என மக்களிடையே கேள்வி எழும்பியுள்ளது. நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள இவ்வாறான சூழ்நிலையில் அது தொடர்பான தகவல்களை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை ஊடகத்தினூடாக மக்கள் நேரடியாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்குவதானது, மக்களின் தகவல் அறியும் உரிமையை மதிக்கும் ஒரு செயற்பாடாகும். அத்தோடு உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கமைய பாராளுமன்றில் மட்டுமல்ல அதன் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளும் ஊடகங்களில் காண்பிக்கப்படவேண்டும். அதனூடாக பாராளுமன்றில் மட்டுமல்ல தெரிவிக்குழுவிலும் தமது பிரதிநிதி எவ்வாறு நடந்துக்கொள்கிறார் என்பது மக்கள் அறிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று கூறி, சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய சங்கங்கள் நீண்டகாலமாக போராடி பெற்றுக்கொண்ட வாய்ப்பாகும்.

இவ்வாறு மே 29 திகதி நேரடியாக பியோ டிவியினூடாக காட்டப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுக்கூட்டம், திடீரென இடைநிறுத்தப்பட்டது. உயர் அரசியல்மட்ட தலையீட்டின் காரணமாக இவ்வாறு நேரடி ஔிபரப்பு இடைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தலையீட்டினை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாத தாக்குலை தடுக்க முடியாது போனமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை அறிந்துக்கொள்வதற்கு மக்களுக்குள்ள உரிமையை தடுக்க வேண்டாம் என்றும் மக்கள் குறித்த விடயம் தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு நேரடி ஔிபரப்பை மீண்டும் வழங்குமாறும் உரிய தரப்பினரிடம் கோருவதாகவும் சுந்திர ஊடகவியலாளர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435