புகையிரத கடவை ஊழியர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு

யாழ். பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை இன்று (10) ஆரம்பித்துள்ளனர்.

நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு , பண்டிகைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே தங்களது பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் எந்தவித நியாயமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் நேற்று (09) யாழ்.புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் ஒன்று கூடிய பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் அரசாங்கத்தினால் தீர்வு வழங்காத நிலையில், காலவரையறையற்ற போராட்டத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசு எங்களது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இந்த காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு நாளை காலை 6 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இப்பணிப்புறக்கணிப்பினை வடகிழக்கு மாகாணங்களில், உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர் எனவும் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர் சங்கத்தின் தலைவர் அமலதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து நாளொன்றிற்கு 250 ரூபா வீதம் 30 நாள் கடமையாற்றி வருகின்றதாகவும், சுட்டிக் காட்டியுள்ளனர்.

பண்டிகைக்காலங்களில் தமக்கான பண்டிகைக்கொடுப்பனவுகளை சரி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், கடந்த ஆட்சியின் போது, போக்குவரத்து அமைச்சராக இருந்த குமாரவெல்கம 1200 பேரை புகையிரத ஊழியர்களாக கடமையில் அமர்த்தியுள்ளார்.

அவ்வாறு கடமையில் அமர்த்தப்பட்டவர்கள், பெரும்பான்மை இனத்தவர்களை நியமித்துள்ளனர். அதேபோன்று, தற்போதைய அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் ஊழியர்களை நியமித்துள்ளார்.

வடக்கில் உள்ளவர்களை நியமிக்காது பெரும்பான்மை இனத்தவர்களை இணைத்துள்ளமை எம்மைத் தாழ்த்தும் செயல். எனவே, இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறும்,

அவ்வாறு செய்யப்பட்ட நியமனங்களை ரத்துச்செய்யுமாறு, தாம் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கும் நியமனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஆனாலும், வடகிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களை புறந்தள்ளி விட்டு பெரும்பான்மை இனத்தவர்களை நியமிப்பதற்கே எமது எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றோம்.

தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய பதில்கள் தராவிடின், எதிர்காலத்தில் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுப்போம் புகையிரத கடவை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி- தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435