அண்மையில் நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் இடமாற்றம் தேவைப்படின் மேல்முறையீடு செய்யலாம் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணம் அறிவித்துள்ளார்.
தமது மாகாணத்துக்கோ அல்லது மாவட்டத்திற்கோ நியமனங்களை மாற்றிக்கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் இன்றும் (17) நாளையும் (18) தமது மாகாணக் கல்விப்பணிப்பாளரை அல்லது அமைச்சின் கல்வியியற் கல்லூரி ஆணையாளரை தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் நான்காம் திகதி நியமனம் வழங்கப்பட்ட ஆசிசிரியர்களுக்கே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 011 2784819 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு அடையாள அட்டை இலக்கத்தை வழங்கி மேலதிக அறிவுறுத்தல்களையும் பெற முடியும்.
வேலைத்தளம்