புதிய ஆசிரியர் நியமனத்துடன் உயர் கல்விக்கான கடனுதவி

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்க கடனடிப்படையில் நிதியொதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தனது வேண்டுகோளுக்கிணங்க பிரதமர் இவ்வனுமதியை வழங்கியுள்ளார் என்று அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமைச்சர் தெரிவித்தார்.

மலையக பாடசாலைகளில் மூவாயிரம் ஆசிரியர்களை நியமிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னர் மேற்படிப்பை தொடர்வதற்கான நிதி கடனடிப்படையில் வழங்கப்படவுள்ளது. இந்நிதியை கொண்டு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களிலும் தமது பட்டப்படிப்பைத் தொடர முடியும்.

அவ்வாறு கடனுதவி பெரும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டப் பாடசாலைகளில் பணியாற்றினால் அவர்களுடைய கடனை இரத்து செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435