அரசாங்க சேவையாளர்கள் அனைவரினதும் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்தற்கான புதிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவை ஸ்;தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
அரசாங்க சேவையில் தற்போது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் என்பன தொடர்பில் அமுல்படுத்தப்படும் சம்பள சுற்றுநிரூபம் குறித்து இந்த புதிய சம்பள நிர்ணய ஆணைக்குழு கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.