நாட்டுக்கு பொருத்தமான புதிய வர்த்தக கொள்கையை தயாரிப்பதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை அமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச மற்;றும் தனியார் சேவை பணியாளர்கள், நிபுணர்கள், தொழில்முயற்சியாளர்கள் ஆகியோர் அடங்கும் வகையில் இந்தக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்;சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குழுவில் நியமிக்கப்படவுள்ள நிபுணர்கள், தொழிற்துறை சார்ந்தோர் மற்றும் முதலீட்டாளர்களின் பெயர் விபரத்தை அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: லங்காதீப