பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்றும் அடுத்த வாரம் அது கிடைக்கும் எனத் தாம் கருதுவதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சிறப்புரையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு வருடம் ஒன்றிற்கு 500 ரூபாய் கம்பனிகள் வரி பணமாக செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காடுகளாக்கப்பட்டிருக்கும் பெருந்தோட்ட காணிகளுக்கும் தண்டப்பணம் அறவிட வேண்டும் என நான் தெரிவிக்கின்றேன்.
பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் பல்வேறு தொழில் விடயங்களுக்காக மாணியங்கள் வழங்கப்படுவதாக ஒழிந்திருக்கும் சில விடயங்கள் இப்போது வெளிவந்துள்ளது.
அதேநேரத்தில் அரசாங்கத்தின் அரசியல் சூழ்நிலை சுமூகமான நிலைக்கு வரும் போது இவைகள் தொடர்பாக நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் அமர்ந்து பேசவுள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.