புத்தளம் – கடுபிட்டிய ஓயவில் உப்பு நீர் கலந்துள்ளமையினால் விவசாய செய்கையை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 500 ஏக்கர் அளவு வயல் நிலத்தில் குறித்த காரணத்தினால் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் குறித்த வயல் நிலத்தில் ஒரு பகுதியில் கடந்த 20 வருடங்களாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார். පුත්තලම –
கடுபிட்டிய ஆற்றில் கடல் நீர் கலந்துள்ளமையினால் இந்நிலை தோன்றியுள்ளது.
மாதம்பே பிரதேசத்தில அமைந்துள்ள தனிபிட்டி குளத்தில் உள்ள மேலதிக நீரை கடுபிட்டி ஓயவிற்கே திறந்து விடப்படுகிறது. நீரை பாதுகாப்பதற்கு எதுவித ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் குறித்த பிரதேச விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.