புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

புலம்பெயர் இலங்கை தொழிலாளர் நலன் காப்பதற்காக வழங்கப்பட்ட மூன்று உறுதி மொழிகளில் இரண்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஷ்ரமிக்க சுரக்கும் நடமாடும் சேவை கடந்த மூன்றாம் திகதி தலகமுவ பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நல்லாட்சியில் ஸ்தீரத்தன்மை கொண்ட நாட்டை உருவாக்குதல் கொள்கையின் கீழ், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், புலம்பெயர் தொழிலாளர்களின் கணக்குகளுக்கு 2.5 வீத வட்டியை சேர்த்தல் போன்ற உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி பதவியேற்பின் முதலாவது வருட நிறைவின் போது ஷ்ரமிக்க சுரக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தினூடாக புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு பிரதேச செயலக பிரிவுகளில் பணியாற்றும் அபிவிருத்தி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய முறை இவ்வருடத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435