இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு திரும்பியழைக்கும் நடவடிக்கை இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது,
அழைத்து வரப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளமையினால் அழைத்து வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் ஆரம்பப்பகுதியில் இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளங்கண்டதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடு திரும்ப எதிர்பார்த்திருந்த சுமார் 48,000 இலங்கையர்கள் வௌிநாடுகளில் மீள அழைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கும் வரை காத்திருக்கின்றனர். எதிர்காலத்தில் மேலும் பலர் நாடு திரும்ப பதிவு செய்யக்கூடும் என்றும் பணியக ஊடகப் பேசசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி – சண்டே ஒப்சவர்