புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களுக்கான சந்தர்ப்பம்

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தெற்காசிய பிராந்திய கலநதாய்வு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இரண்டு நாள் செயலமர்வு நேற்று (13) ஆரம்பிக்கப்பட்டது.

இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்வாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலின் பரிந்துரைகள், எதிர்வரும் 15ஆம், 16ஆம் திகதிகளில் காத்மண்டுவில் இடம்பெறவுள்ள கொழும்பு முறைமை கலந்துரையாடலில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சு ரீதியான ஆலோசகர்கள் ஆகியோரின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இதில் முதலாவது தினத்தில், நியாயமான மற்றும் நெறிமுறையான ஆட்சேர்ப்பு, பிரச்சினைக்குரிய நிலைமையின்போது புலம்பெயர்வாளர்களுக்காக கொன்சியூலர் சேவை மற்றும் நீதி என்பனவற்றுக்கான பிரவேசம், நலன்புரி, பாதுகாப்பு என்;பன தொடர்பில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இரண்டாவது தினத்தில் ஒழுக்கமான தொழில், பாதுகாப்பான வழிமுறை மற்றும் முறையான புலம்பெயர்வு என்ற தொனிப்பொருளில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறவுள்ளது.

கொழும்பு முறைமை (ஊழடழஅடிழ Pசழஉநளள) என்பது ஆசிய நாடுகளை குறிப்பாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் ஒப்பந்த தொழில் முகாமைத்துவம் பற்றிய பிராந்திய ஆலோசனை செயற்பாடாகும். இதற்கமைய, வருடாந்தம் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2.5 மில்லியன் தொழிலாளர்கள் தமது நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்;கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்காக வெளியேறுகின்றனர்.

கொழும்பு முறைமையானது, வருடாந்த கலந்தாய்வு அதன் பரிந்துரைகள் மற்றும் திட்ட முன்மொழிவுகள் என்பன பங்குபற்றும் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முன்னதான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்னோக்கிய நடவடிக்கைகளை அடையாளம்காணுவதாகும்.

சார்க் பிராந்திய ஆலோசனை கலந்தாய்வின் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், உறுப்பினர் அல்லாத நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு, முறைசாரா கலந்துரையாடல் மற்றம் ஒத்துழைப்புக்களை வழங்க, பொதுவான விருப்பம் மற்றும் அக்கறையுடன் கூடிய புலம்பெயர் தொழிலாளர் புலம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகளில் உரையாடல்களையும் ஒத்துழைப்பையும் ஈடுபடுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435