கட்டார் தலைநகர் தோஹாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட இருப்பிட வசதிகளையும் கொண்ட நகரொன்றை நிர்மாணிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுமார் 68,640 பேர் தங்கக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்நகரானது 1.3 மில்லியன் ரியால் (356 அமெரிக்க டொலர்) செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
1.8 மில்லியன் சதுர அடிகளை கொண்ட இந்நகரில் 17,000 பேர் அமரக்கூடிய கலையரங்கம், வணிக மத்திய நிலையம், விற்பனை நிலையம், 4 சினிமா தியேட்டர்கள், கிரிக்கட் மைதானம், 2 பொலிஸ் நிலையங்கள், இரு முஸ்லில் பள்ளிவாசல்கள், வைத்திய மத்திய நிலையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.