குவைத்தில் புலம்பெயர் தொழிலாளரின் அவசியம்

நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க குவைத் நடவடிக்கை எடுக்குமாயின் சுகாதார துறையுட்பட பல துறைகளில் ஆளணி பற்றாக்குறை ஏற்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் உள்நாட்டவரை விடவும் வௌிநாட்டவர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை கருத்திற்கொண்டு சனத்தொகை குறைப்பு நிமித்தம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ள நிலையில் ஊடகங்கள் இவ்வாறு செய்தி வௌியிட்டுள்ளன.

குவைத் நாட்டின் சுகாதார துறை ஆளணி தேவையை புலம்பெயர் தொழிலாளர்களே நிறைவேற்றுகின்றனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குவைத் அதிகாரிகளின் முன்மொழிவுக்கமைய அங்கு பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்தால் ஏற்படும் ஆளணி பற்றாக்குறைக்கு உள்வாங்குவதற்கு தகைமை வாய்ந்த உள்நாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றனர் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குவைத்தில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதிகள், தொழில்நுட்ப அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற துறைகளில் அதிகமாக புலம்பெயர் தொழிலாளர்களே பணியாற்றுகின்றனர். அவர்களை பணிநீக்கம் செய்து உள்நாட்டவர்கள் உள்வாங்கப்படின் அந்நாடு பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

அந்நாட்டு உத்தியோகப்பூர்வ அறிக்கைக்கமைய, சுகாதார துறையில் பணியாற்றும் 22,000 தாதிமாரில் வௌிநாட்டு பணியாளர்களை நீக்கினால் வெறுமனே 6 வீதமானவர்கள் மட்டுமே எஞ்சுவர் என்றும் இதனால் சுகாதாரதுறை பாரிய பின்னடைவை சந்திக்கும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குவைத்தில் பணியாற்றும் அந்நாட்டு வைத்தியர்கள் மற்றும் வௌிநாட்டு வைத்தியர்கள் எண்ணிக்கையில் பெறும் இடைவௌி காணப்படுவதாகவும் அந்நாட்டில் பணியாற்றும் வைத்தியர்களில் 70 வீதமானவர்கள் வௌிநாட்டவர்கள் என்றும் அவர்களை பணிநீக்கம் செய்தால் ஏற்படும வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதுமான அளவு உள்நாட்டு வைத்தியர்கள் இல்லை என்றும் அந்நாட்டில் பணியாற்றும் 3500 வைத்தியர்களில் 1500 பேர் மட்டுமே உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டில் அந்நாட்டு சனத்தொகை 4.3ஆக இருந்த போதிலும் அதில் 31.7 வீதமே உள்நாட்டு சனத்தொகை ஆகும். அந்நாட்டில் பணியாற்றும் 2.5 பில்லியன் உழைக்கும் வர்க்கத்தில் உள்நாட்டவரின் பங்களிப்பு வெறும் 4.3 வீதம் மட்டுமே.

நாட்டில் வௌிநாட்டு தொழிலாளர்களை வௌியேற்றுவது தொடர்பில் திடீரென எடுக்கப்பட்ட இத்தீர்மானமானது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435