புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக 24 மணிநேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய புலம்பெயர் தொடர்பான தகவல்களை பெற விரும்புவோர் 1987 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரச்சினைகளைச் சந்திக்கும் போது வௌிநாடுகளில் பணியாற்றுவோர், மாணவர்கள் இவ் இலக்கத்தின் ஊடாக இலங்கைத் தூதரகங்கள், கொன்சியூலர் ஜெனரல் அலுவலகங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
கடந்த பல வாரங்களாக வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையின் உதவியுடன் வௌிநாடுகளில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்தவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். இதுவரை 1065 பேர் அழைத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது