பெய்ருட் வெடிப்பில் 15 இலங்கையர்கள் காயம்- தூதரக தகவல்கள்

லெபனான் தலைநகர் பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது என அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு காயமடைந்த அனைவரும் அங்கு பணியாற்றிய பெண்கள் என்றும் அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் பெய்ருட்டில் துறைமுகப்பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனைகளில் குருதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனையடுத்து லெபனானுக்கான இலங்கை துதுவர் திருமதி ஷானி கல்யாணரத்ன உட்பட அதிகாரிகள் இரத்த தானம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக லெபனானில் சிக்கியுள்ள 285 இலங்கையர்கள் எதிர்வரும் 15ம் திகதி நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435