பெருந்தோட்டத்துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இலங்கை பெருந்தோட்ட கல்வி நம்பிக்கை நிதியத்தால் இந்த புலமைபரிசில்கள் வழங்கப்படுகின்றன.
க.பொத உயர்தர மாணவர்கள், இளமாணி பட்ட கற்கைகள் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த சாதாரணதரத்தில் 6 திறமை சித்திகள் பெற்ற அல்லது உயர்தரம் பூர்த்தி செய்த 25 வயதுக்கு குறைந்த மாணவர்கள் விண்ண்பிக்கலாம்.
விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.org என்ற இணையதள முகவரியினூடாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
அல்லது கொழும்பு 3, காலி வீதி, இலக்கம் 36, 38 இலக்கத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கண்டி ரஜபிஹில்ல மாவத்தையிலுள்ள 31ம் இலக்க முகவரியில் அமைந்துள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களை நேரடியாக சென்று பெற்றுக்கொள்ள முடியும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களுடன் பிறப்புச் சான்றிதழ், க. பொ.த சாதாரண தர மற்றும் பொது தராதர பரீட்சை பெறுபேறுகளுடன் பெற்றோரின் பிந்திய ஊதிய பட்டியல், பெற்றோரின் தொழில் தொடர்பில் பெருந்தோட்ட த்துறை மேற்பார்வையாளர் சான்றிதழ் என்பன இணைக்கப்பட்டு விண்ணப்பிக்கப்படல் வேண்டும்.
விண்ணப்பங்களை கௌரவ செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கல்வி நம்பிக்கை நிதியம் (CEWET), மேற்பார்த்து இந்திய உயர்ஸ்தானிகராலயம், த.பெ. இல 882, கொழும்பு 3 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஜூன் மாதம் 30ம் திகதி ஆகும்.