பெருந்தோட்டப்பகுதிகளில் மண்சரிவு அபாயம்

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை முதலான மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதேநேரம், மேற்கு, சப்ரகமுவ, தென், மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் 150 மில்லமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

2 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப் பெய்வதுடன், பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைப் அதிகரித்து பெய்யக்கூடும்.

அதிக மழைப் பெய்யும் காலப்பகுதியில் இடிமின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமான கடும் காற்றும் வீசக்கூடும் என்பதனால் குறித்த சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435