பெருந்தோட்ட சபை, கூட்டுத்தாபன ஊழியர் சம்பளம்!

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபன ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்காக அரசாங்கம் மேலதிக நிதியுதவியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட தீர்மானங்கள் பின்வருமாறு :

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்திற்கு மேலதிக நிதியுதவியை பெற்றுக் கொடுத்தல் (நிழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்)

வருடகாலமாக குறைவான செயல்திறனை பதிவு செய்துள்ள மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தை புனரமைப்புக்கான பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு அவற்றின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவது அரசாங்கத்திற்கு வரவு செலவுத்திட்டத்தில் பாரிய சுமையாக அiமந்துள்ளது.

இந்த நிறுவனத்தை மறுசீரமைத்து இலாபமிக்கதாக முன்னெடுத்து வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு மேலும் குறிப்பிடத்தக்க காலம் செல்லக்கூடும் என்பதினால் 2019 ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரையில் இந்த நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளம் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு 113 மில்லியன் ரூபா மானியத்தையும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கு 78 மில்லியன் ரூபா மானியத்தையும் வழங்குவதற்காக அரச தொழிற்துறை மலையக உரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நன்றி- அரசாங்க தகவல் திணைக்களம்/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435