பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் பிரதமரின் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு தொடர்பில் சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு இலகுவாக அமையும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு , உற்பத்தி மற்றும் வரவுக்கான கொடுப்பனவுகள் அடங்களாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தோட்ட நிறுவனஙகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டுமென இதன்போது பிரதமரிடம் கோரிப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435