பேஸ்புக் பாவனையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை

பேஸ்புக் ஊடாக தேர்தல் விதிமீறல்களை ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், பாரபட்சமாக அல்லது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேஸ்புக் ஊடாக பிரசாரங்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.

இதையடுத்து. குறித்த கணக்கை தடை செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435