மலையக தொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்தை…

மலையக தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இன்றும் (25) நாளையும் (26) பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சிரேஸ்ட தொழிலுறுவு

இயக்குநருமான எ வேங்குருசாமி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உபதலைவர் அனுப்பியுள்ள அறிக்கையில், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளினால் தினமும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் பாராமுகமாய் உள்ளன. இதற்கான காத்திரமான தீர்வை அடையவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று 2.00 மணிக்கு கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரி கேட்போர்கூடத்தில் பொவந்தலாவ பிளாண்டேஷனுக்குட்பட்ட தோட்ட நிர்வாகிகளையும் கம்பனி நிறைவேற்று அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடி உரிய தீர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்க தயாராகி வருகிறது.

இதேபோல் நாளை (26) அன்று மாலை 2.00 மணிக்கு மஸ்கெலிய பிளாண்டேஷனுக்குட்பட்ட தோட்ட நிர்வாகிகள் மற்றும் கம்பனி நிறைவேற்று அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு பேச்சுவார்த்தைகளிலும் இ.தொ.காவின் தலைவரும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாணசபை அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா உபதலைவர் எ அருள்சாமி உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள், இ.தொ.கா உபதலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நன்றி- வீரகேசரி/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435