பொதுப்போக்குவரத்தில் கைவிடப்படும் சமூக இடைவெளி: மக்களே அவதானம்

ஊரடங்கு உத்தரவு அமுலாகும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச-தனியார் பஸ் வண்டிகளிலும், ரயில் வண்டிகளிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க இன்றுமுதல் அனுமதி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று கருத்து தெரிவிக்கையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்றார்.

அதன் காரணமாக அநாவசியமான பயணங்களைத் பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்று மேற்கொள்ளப்படவுள்ள பொது போக்குவரத்து குறித்து அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், அரச-தனியார் ஊழியர்கள் கடமைகளுக்குத் திரும்பத் தயாராகிறார்கள். அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை சீராக்குவது பற்றி கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இங்கு எட்டப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம், கடமைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி போக்குவரத்துச் சேவைகளை நடத்த முடியும். பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்.

இன்று தொடக்கம் ரயில் பயணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களும், பருவச் சீட்டுக்களும் விநியோகிக்கப்படும். அனுமதிப் பத்திரம் பெறும் பயணிகள் தமது நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ஆள் அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமானது.

பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மூலம் : News.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435