பொதுப்போக்குவரத்தில் 90 வீத பெண்களுக்கு பாலியல் தொந்தரவு

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவைகளான பஸ் மற்றும் ரயில்களில் 90 சதவீத பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்களே 50 சதவீதம் பாதிக்கப்படுவதாக அந்நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகளின் படி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் 90 சதவீத பெண்களில் நான்கு சதவீதமான பெண்கள் மாத்திரமே பொலிஸ் மற்றும் ஏனையோரிடம் உதவி கோரியுள்ளனர்.பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றமை குறித்து முறையிடும் அவசர தொடர்பு இலக்கம் குறித்து 74 சதவீத பெண்கள் அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் பெண்களில் 17 சதவீதமானவர்கள் அந்தச் சம்பவங்கள் தங்களது வேலையை நேர்மறையாக பாதித்ததாக தெரிவித்துள்ளனர். அத்துடன், 29 சதவீதமானோர் அந்தச் சம்பவங்கள் தங்களது கல்வியை நேர்மறையாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் பொருளாதார செயல்திறன் உள்ள வயதுப் பிரிவிலுள்ள பெண்களில் 34 சதவீதமானோர் மட்டுமே தொழிலில் ஈடுபடுவதாக இலங்கை தொழிலாளர் தொகை ஆய்வு ஆண்டறிக்கை, புள்ளிவிபரவியல் மற்றும் தொகைமதிப்பு திணைக்களம் ஆகியவற்றின் 2014 ஆம் ஆண்டு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435