அனைத்து தொற்று நோய் தடுப்பு பணிகளில் இருந்தும் இன்று (19) முதல் விலகவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடவத்தையில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அந்த சங்கத்தினர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கொவிட்-19 உள்ளிட்ட தொற்று நோய்களை தடுக்கும் நோக்கில் அதற்கான சட்ட ரீதியான அதிகாரத்தை உருவாக்குமாறு அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த பணிகளில் இருந்து நேற்று முன்தினம் (17) முதல் பொது சுகாதார பரிசோதகர்கள் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.