பொது போக்குவரத்து வழமைக்கு கொண்டு வருவது குறித்த இறுதித் தீர்மானம் நாளை

பொது போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை (08) ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும் என்று பொது போக்குவரத்து முகாமைத்தும், மின்சக்தி எரிசக்தி அமைச்ரச் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து இன்று கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் மாத்திரம் நடைபெறும். நாளை தொடக்கம் பொதுப்போக்குவரத்தை வழமைப்போல் முன்னெடுக்க தீர்மானித்திருந்த போதிலும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு கடந்த 5ம் திகதி வௌியிட்டிருந்த அறிக்கையில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையில் பொதுப்போக்குவரத்து இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது எனவே, ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார பிரிவுகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய, வாகன இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்ல தற்போதுள்ள இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் தனியார் பஸ்கள் போதாமையினால் மாற்று வழியாக சுற்றுலா சேவை பஸ்களையும் தற்போது பதிவுக்கான அனுமதி ஆவணங்கள் உள்ள பஸ்களையும் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுத்த தற்காலிகமாக பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்காலிகமாக பதிவு செய்யப்படும் பஸ்கள் தேவைக்கமைய மட்டுமே சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவுறத்தல்களை தாம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435