முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான மேலதிகமாக 900 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய பொது நிர்வாகம், மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, புதிய ஆட்சேர்ப்பு 2017 ஆம் ஆண்டில் முகாமைத்துவ சேவைகள் திறந்த போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டில், முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு 4500 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், உரிய நேர்த்தில் கடமைகளுக்கு சமூமளிக்காதவர்களின் சார்பில் இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த புதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனம் கடிதங்களை வழங்கும் நிகழ்வு பொது நிர்வாக மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
சேவை அவசியத்திற்கு அமைய, இந்த புதிய அதிகாரிகள் பல்வேறு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.