பொலிஸாரின் சம்பளம் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மிகுந்த நெருக்கடியில் வாழ்கின்றவர்கள். அவர்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு தொழிற்சங்கங்கள் இல்லை. கடமைகளை தவிர்த்து செயற்படும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படுவதில்லை. ஓய்வு நாட்கள் காவல்துறையினருக்கு அரச விடுமுறைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென்று வழங்கப்படுகின்ற விடுமுறைகளும் அவ்வப்போது தடுக்கப்படுகின்றது.
இத்தகைய நிலைகளை கருத்திற்கொண்டு அவர்களின் வேதனம் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.