வடக்கு இளைஞர் யுவதிகள் தாதியர் சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும்

வடக்கிலுள்ள தகுதியுள்ள இளைஞர் யுவதிகள் தாதியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பது மிக அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் வலியுறுத்தியுள்ளார்.

பயிற்சியின் பின்னர் தாதியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக க.பொ. உயர்தரத்தில் விஞ்ஞானபிரிவில் தோற்றியவர்களிடமிருந்து சுகாதார அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் பரீட்சையில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தவர்கே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரி 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 28 வயதுக்கு குறைந்தவராகவும் இருக்க வேண்டும். மேற்கூறிய தகுதியுடைவர்கள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இத்துறைக்கு இதுவரை 95 வீதமான பெண்களும் 5 வீதமான ஆண்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435