பொது மக்கள் அவசியான பொலிஸ் சேவைகளை ஒன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை டுபாய் பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. சேவைகளை நேரடியாக பெற்றுக்கொள்வதாயின் 100 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் பொலிஸ் நிலையத்திற்கு பொது மக்களின் வருகையை 80 வீதமாக குறைக்கும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மக்கள் ஒன்லைன் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக நேரடிச் சேவைகளுக்கு கட்டணம் அறிவிடப்படுகிறது.
கடந்த வருடம் ஒன்லைன் மூலமாக பெறக்கூடிய சேவைகள் ஐந்து அறிமுகப்படுத்தியுள்ளதுடன் நேற்று தொடக்கம் மேலதிகமாக 13 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இ-கேட், ஸ்மார் அப், கிஷோக் மற்றும் ஐபேட் ஆகியவற்றினூடாக இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இரவு வேளைக்கான அனுமதி, காணாமல் போனவை தொடர்பில், சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப்பணம் செலுத்தல், விபத்துக்கான இ சான்றிதழ் பெறல், வீட்டு பாதுகாப்புத் தொகுதி, போக்குவரத்து தண்டப்பணச் சான்றிதழ், போக்குவரத்து தண்டப்பண விபரங்கள், வீதி போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான விபரங்கள், சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பம், சிறுவிபத்து குறித்து முறையிடல் மற்றும் சந்தேகத்துக்கிடமான ஒன்லைன் செயற்பாடுகள் போன்ற சேவைகளை பொலிஸாரிடம் ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.